×

பார்வை மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

 

தேனி, மார்ச் 2: தேனி மாவட்டத்தில் பார்வைக்குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன் பெறுவதற்கு வருகிற 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கூறியதாவது :
தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயது முதல் 70 வயது வரையுள்ள பார்வையற்றோர் , பார்வைக் குறைபாடு உடையோர், செவித்திறன் குறைபாடு உடையோர், காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற பார்வையற்றோர் பார்வைக்குறைபாடு உடையோர், செவித்திறன் குறைபாடு உடையோர், காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளி அடையாள அட்டை நகல், யுடிஐடி அட்டை நகல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் 2 மற்றும் கல்லூரியில் பயிலும் சான்று, சுயதொழில்புரியும் சான்று, நிறுவனத்தில் பணிபுரியும் சான்று ஆகியவற்றுடன் வருகிற 6ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விபரங்களுக்கு 04546 252085 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post பார்வை மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni district ,Collector ,Shajivana ,Dinakaran ,
× RELATED அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை